கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிக்கலாம் பாளையத்தில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 12 வயதுடைய யாஷினி என்ற மகள் உள்ளார். இந்த சிறுமி கிணத்துக்கடவு வீரப்ப கவுண்டனூர் சாலையோரம் குப்பையை கொட்டி விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஸ்கூட்டர் யாஷினி மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த சிறுமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ஸ்கூட்டரை ஓட்டி வந்த அஸ்வின் மகேஷ்(20) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.