நாம் தமிழர் கட்சியிலிருந்து தொடர்ந்து நிர்வாகிகள் விலகி வருகிறார்கள். இன்று கூட கோவை மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் விலகினர். மாவட்ட செயலாளர்கள் பலர் நாம் தமிழர் கட்சியில் இருந்து அடுத்தடுத்து விலகி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமானிடம் இது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்காக நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி செல்பவர்கள் ஸ்லீப்பர் செல்ஸ் என்று கூறினார். அதன் பிறகு கட்சியிலிருந்து விலகி சென்றவர்களை நாங்கள் ஏன் உளவு பார்க்க வேண்டும் என்று கூறினார்.
அதன் பிறகு ரஜினியை சந்தித்தது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் ரஜினிகாந்தை நீண்ட நாட்களாக சந்திக்க வேண்டும் என்று நினைத்ததாகவும் அரசியல் மற்றும் திரைத்துறை சம்பந்தமாக நிறைய விஷயங்களை பேசியதாகவும் அது பற்றி தற்போது விளக்கமாக கூற முடியாது என்றும் கூறினார். மேலும் திமுகவை விமர்சித்தார். அவர்களை சங்கி என்று அழைப்பதா. சங்கி என்றால் நண்பன் மற்றும் சக தோழன் என்பதுதான் அர்த்தம். எங்களை சங்கி என்று அழைப்பதால் அதை நினைத்து நாங்கள் வருத்தப்பட மாட்டோம் என்றும் கூறினார்.
