தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான டான் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் நூறு கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. தற்போது மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தை இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்குகின்றார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஷங்கர் மகளான அதிதி ஷங்கர் நடிக்கின்றார். இடையில் சில பிரச்சனையால் படத்திலிருந்து சிவகார்த்திகேயன் விலகியதாக தகவல் வெளியானது.

ஆனால் படக்குழு இதனை மறுத்தது. மேலும் சிவகார்த்திகேயன் சினிமாவிற்கு வந்து 11 வருடங்கள் ஆனதை படக்குழு கேக் வெட்டி கொண்டாடினார்கள். அப்போது எடுத்த புகைப்படத்தை சிவகார்த்திகேயன் இணையத்தில் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் மாவீரன் படபிடிப்பிற்கு MOCOBOT ரோபோட்டிக் ஆர்ம் பயன்படுத்துவதை சிவகார்த்திகேயன் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டு இருக்கின்றார். இந்த தொழில்நுட்பம் ஏற்கனவே துணிவு, விக்ரம், பீஸ்ட் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு பயன்படுத்தப்பட்ட நிலையில் தற்போது மாவீரன் திரைப்படத்திற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.