இயக்குனர், நடிகர் என தனக்குள் பன்முகத் தன்மைகளை கொண்டுள்ளார் பார்த்திபன். இவர் நடிப்பில் கடைசியாக இரவின் நிழல் திரைப்படம் ரிலீஸ் ஆனது. நான் லீனியர் கதையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டதால் இத்திரைப்படம் அனைவரையும் கவனம் ஈர்த்தது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.

இந்த நிலையில் பார்த்திபன் ஏ.ஆர்.ரகுமானுக்கு பரிசு ஒன்றை கொடுத்திருக்கின்றார். அந்த பரிசு பியானோ வடிவில் இருக்கின்றது. இது பற்றி அவர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளதாவது, ஆன்மாவை அலங்கரிப்பது இசை. இசை புயலின் அலுவலக அலங்காரத்தில் என் பரிசும். மனதில் மகிழ்ச்சி Tune ஆகிறது என பதிவிட்டு இருக்கின்றார்.