தமிழ் சினிமா உலகில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருகின்றார் சூரி. இவரின் பரோட்டா காமெடி மக்களிடையே நன்றாக ரீச் ஆகி இவரை பரோட்டா சூரி என அழைக்க ஆரம்பித்தனர். இதன் பின் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வெற்றியை திரைப்படங்களை தந்து வந்தார். இந்த நிலையில் தற்போது அவரே ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.

வெற்றிமாறன் இயக்கும் விடுதலை திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருக்கின்றார். இத்திரைப்படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றார்கள். இந்த நிலையில் அவரின் குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கின்றது. அந்த புகைப்படத்தில் அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருக்கின்றார்.