மேற்கு வங்காளம் கொல்கத்தாவில் சென்ற 2007 ஆம் வருடம் மே மாதம் 7 ஆம் தேதி சாலையில் சிறுமி ஒருவர் தனியாக நடந்து சென்றுள்ளார். அப்போது ராபி ராய் என்ற இளைஞர் சிறுமியின் வாயை மூடிவிட்டு, அவரின் உள்ளாடை உட்பட உடைகள் அனைத்தையும் கழற்றி உள்ளார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ராபியை கைது செய்தனர்.
பின் கீழமை கோர்ட்டில் வழங்கிய தீர்ப்பில் ராபிக்கு ஐந்தரை வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து கொல்கத்தா ஐகோர்ட்டில் ராபி மேல் முறையீடு செய்தார். மேலும் அந்த சிறுமி சார்பில் ராபியை எதிர்த்து இடையீட்டு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கில் கொல்கத்தா நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், சிறுமியின் உள்ளாடையை அவரின் அனுமதியின்றி அகற்றுவது பலாத்காரத்துக்கு இணையான குற்றமாகும். இதனால் இத்தண்டனையை நீக்கமுடியாது என்று ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.