கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் அண்மையில் வெளியாகிய வெந்து தணிந்தது காடு படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல எனும் படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இப்படத்தில் சிம்புவுடன் இணைந்து கவுதம் மேனன், கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

இத்திரைப்படத்தின் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் பத்து தல படத்தில் ஆர்யாவின் மனைவி நடிகை சாய்ஷா ஆர்யா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக இயக்குனர் ஒபலி என்.கிருஷ்ணா டீசர் வெளியிட்டு விழாவில் தெரிவித்து உள்ளார்.