திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. திருமணத்திற்குப் பின் ராஷ்மிகா நடிப்பில் வெளிவரவிருக்கும் ‘காக்டெய்ல் 2’ திரைப்படத்தில், அவர் ஷாஹித் கபூர் மற்றும் க்ரித்தி சனோன் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார்.

இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், இப்படம் வருகிற ஜூன் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையில், சமூக வலைத்தளங்களில் ஒரு புதிய வீடியோ வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வீடியோவில் இருக்கும் ஒரு பெண், அச்சு அசலாக அப்படியே நடிகை ராஷ்மிகா மந்தனா போலவே காட்சியளிப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

“>

 

ராஷ்மிகாவின் சாயலில் இருக்கும் அந்தப் பெண்ணின் வீடியோ தற்போது இணையத்தில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.