உத்தரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத் பகுதியில், கார் ஓட்டுநரின் சிறிய அலட்சியத்தால் வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த கொடூரமான விபத்து நிகழ்ந்துள்ளது. சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காரின் கதவை அதன் ஓட்டுநர் பின்னால் வரும் வாகனங்களைக் கவனிக்காமல் திடீரெனத் திறந்துள்ளார்.

அதே நேரத்தில் அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள், எதிர்பாராதவிதமாகக் காரின் கதவு மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது.

“>

 

இந்த பயங்கர மோதலில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வாலிபர் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே தனது உயிரை இழந்துள்ளார்.

ஓட்டுநரின் ஒரு நொடி கவனக்குறைவு ஒரு இளம் உயிரைப் பறித்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.