லாக்கப் திரைப்படத்தை டைரக்டு செய்த எஸ்ஜி சார்லஸ் இயக்கியுள்ள சொப்பன சுந்தரி திரைப்படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து உள்ளார். அதோடு லட்சுமி பிரியா, தீபா ஷங்கர், தென்றல், கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி உட்பட பலர் நடித்து உள்ளனர். இந்த நிலையில் சொப்பன சுந்தரி திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.

இந்நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராஜேஷ் பங்கேற்று பேசினார். அவர் பேசியிருப்பதாவது, கதையின் நாயகியாக ஒவ்வொரு திரைப்படத்திலும் நடிப்பதற்கு என் பலமே இயக்குனர்கள் தான். கனா படத்தை எனக்கு வழங்கிய டைரக்டர் அருண் ராஜா, க /பெ ரணசிங்கம் படத்தை வழங்கிய இயக்குனர் விருமாண்டி, சொப்பன சுந்தரி படத்தை வழங்கிய இயக்குனர் சார்லஸ் என இவர்கள் தான் காரணம்.

இதனிடையே நடிகர் மற்றும் நடிகைகள் நட்சத்திர அந்தஸ்தை அடைய டைரக்டர்கள் தான் பொறுப்பு. அதன்படி எனக்கு இயக்குநர்கள் மிகவும் முக்கியம் ஆகும். டைரக்டர் சார்லஸ் முதலில் இப்படத்தை என்னை கதாநாயகியாக வைத்து இயக்கமாட்டேன் என கோபத்துடன் சொல்லி விட்டார். அதன்பின் அவரை நான் அழைத்தவுடன் வருகை தந்தார். அவரது கோபத்தின் ஆயுள் அவ்வளவு தான். ஆகவே கோபத்தால் எதுவுமே நிகழாது. அதனால் இழப்பு ஏற்படுவதே அதிகம் என அவர் பேசியுள்ளார்.