லாக்கப் திரைப்படத்தை டைரக்டு செய்த எஸ்ஜி சார்லஸ் இயக்கியுள்ள சொப்பன சுந்தரி திரைப்படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து உள்ளார். அதோடு லட்சுமி பிரியா, தீபா ஷங்கர், தென்றல், கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி உட்பட பலர் நடித்து உள்ளனர். இந்த நிலையில் சொப்பன சுந்தரி திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதை டைரக்டர் மோகன் ராஜா வெளியிட்டார்.

இதையடுத்து அவர் பேசியதாவது, என் உதவியாளராக பணிபுரிந்த இப்படத்தின் இயக்குனர் சார்லஸ் பிரபு கடும் உழைப்பாளி ஆவார். வேலைக்காரன் திரைப்படத்தின் வெற்றியில் அவரின் பங்களிப்பானது அதிகம். அதற்காக இத்தருணத்தில் அவருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். விமர்சனங்கள் எப்படி இருந்தாலும் சரி ரசிகர்களாகிய நீங்கள் திரையரங்கத்திற்கு சென்று படத்தை பார்வையிட்டு, நல்ல படமா? இல்லையா? என்பதை தீர்மானிக்கவேண்டும். ஆகவே அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தரவேண்டும் என பேசினார்.