காட்டுப் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்த யானைக்கு முன்னால் பைக்கில் வேகமாக வந்து ஓவர்டேக் செய்ய முயன்ற இளைஞர் ஒருவருக்கு, அந்த யானை மரண பயத்தைக் காட்டியுள்ள விசித்திரமான வீடியோ சமூக வலைத்தளங்களில் பயங்கர வைரலாகி வருகிறது.
சாலையில் நிதானமாகச் சென்று கொண்டிருந்த யானையை அந்த இளைஞர் திடீரெனக் கட் அடித்து முந்த முயன்றதால், கோபமடைந்த யானை பயங்கர சத்தத்துடன் அவரை நோக்கி ஆக்ரோஷமாகப் பாய்ந்து துரத்தியுள்ளது.
<a href=”http://
An elephant was walking right in the middle of the road in a forest area, effectively blocking it.
Even then, a sports bike rider, trying to act smart, attempted to squeeze past the elephant from the side. He didn’t wait even a little for the elephant to move away.
The elephant… pic.twitter.com/OyQJYczwHy
— Saffron Chargers (@SaffronChargers) June 5, 2026
“>
இதனால் நிலைகுலைந்து போன அந்த இளைஞர், தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஓட்டி வந்த பைக்கை அப்படியே நடுரோட்டிலேயே போட்டுவிட்டு மின்னல் வேகத்தில் அலறியடித்துக் கொண்டு தப்பியோடியுள்ளார்.
எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டு ஆயிரக்கணக்கான லைக்குகளை அள்ளி வரும் இந்த விபரீத வீடியோ, எங்கு எடுக்கப்பட்டது என்ற விவரம் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. இருப்பினும், அடர்ந்த காட்டுப் பகுதிகள் மற்றும் வனப்பாதைகளில் பயணிக்கும் போது விலங்குகளுக்குத் தொந்தரவு தராமல் மக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், இத்தகைய அஜாக்கிரதையான
செயல்களால் தேவையற்ற ஆபத்துகள் ஏற்படும் என்றும் நெட்டிசன்கள் பலரும் தங்களின் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். அநாகரிகமான முறையில் விலங்குகளைச் சீண்டும் மனிதர்களின் இத்தகைய போக்குகள் மாற வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன.
