மகாராஷ்டிர மாநிலம் ஜல்கான் பகுதியில் உள்ள ஆமோதா கிராமத்தில், வீட்டில் இருந்த டிவியால் 13 வயது சிறுமி உயிரிழந்த சோக சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாஸ்மின் முகமது இஷாக் பிஞ்சாரி என்ற அந்தச் சிறுமி, ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டில் இருந்தபோது, அலமாரியில் வைக்கப்பட்டிருந்த பழைய டிவியானது எதிர்பாராத விதமாக சரிந்து அவர் மீது விழுந்தது.
மேலும் டிவியின் அதிகப்படியான எடை மற்றும் பலமான மோதலால் சிறுமி ரத்த வெள்ளத்தில் நிலைகுலைந்து விழுந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உயிருக்குப் போராடிய சிறுமியை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக புசாவல் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீடுகளில் உள்ள பொருட்களை கவனமாக கையாளுவதன் அவசியத்தை இச்சம்பவம் உணர்த்துகிறது. சிறுமியின் இழப்பால் அவரது குடும்பத்தினர் மீளாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.
