நடிகர் சூர்யாவின் திரைப்பயணத்தில் மிக பிரம்மாண்டமான கம்பேக் திரைப்படமாக அமைந்து, பாக்ஸ் ஆபீஸில் அசுர வேட்டை நடத்திய ‘கருப்பு’ திரைப்படம் வரும் ஜூன் 12-ஆம் தேதி அமேசான் பிரைம் (Amazon Prime Video) ஓடிடி தளத்தில் உலகளவில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இத்திரைப்படம், தியேட்டர்களில் ரிலீஸான நாள் முதல் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவோடு உலகளவில் கிட்டத்தட்ட ₹300 கோடிக்கும் மேல் வசூலை வாரிக் குவித்து மாபெரும் சாதனை படைத்துள்ளது.
பொதுவாகப் பெரிய பட்ஜெட் படங்கள் தியேட்டரில் வெளியாகி 4 வாரங்களுக்குப் பிறகு ஓடிடி-க்கு வரும் வழக்கப்படி, ‘கருப்பு’ திரைப்படத்தின் டிஜிட்டல் ரிலீஸ் தேதியை அமேசான் பிரைம் நிறுவனம் சமூக வலைதளங்களில் அதிரடியாக அறிவித்துள்ளது. ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட போதிலும், படத்தின் மீதான வெறித்தனம் குறையாமல் இன்னமும் பல தியேட்டர்களில் ‘கருப்பு’ திரைப்படம் ஹவுஸ்புல் காட்சிகளாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது கோலிவுட் வட்டாரத்தையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சோசியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவி வரும் இந்த ஓடிடி அறிவிப்பால், தியேட்டரில் பார்க்கத் தவறிய சினிமா ரசிகர்களும், சூர்யாவின் வெறித்தனமான ரசிகர்களும் ஜூன் 12-ஆம் தேதிக்காகத் தற்சமயம் திக் திக் நிமிடங்களுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
