அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பிரபல ‘என்பிசி’ (NBC) தொலைக்காட்சியின் ‘Meet the Press’ நிகழ்ச்சிக்காக நெறியாளர் கிறிஸ்டன் வெல்க்கருக்கு (Kristen Welker) அளித்த பிரத்தியேக நேர்காணலின் போது, ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தால் மைக்கைத் தரையில் போட்டுவிட்டுப் பாதியிலேயே வெளியேறியுள்ள சம்பவம் உலகளவில் மாபெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நேர்காணலின் போது கலிபோர்னியா மாகாணத்தில் தேர்தல் முடிந்து 4 நாட்கள் ஆகியும் வாக்கு எண்ணிக்கை இன்னும் முடிவடையாததைச் சுட்டிக்காட்டிய ட்ரம்ப், அங்குத் தேர்தலில் மிகப்பெரிய அளவில் தில்லுமுல்லு மற்றும் முறைகேடுகள் நடைபெறுவதாக அதிரடிக் குற்றச்சாட்டைக் கிளப்பினார்.
அதற்கு நெறியாளர், “கலிபோர்னியாவில் வழக்கமாகவே வாக்குகள் இப்படித்தான் நிதானமாக எண்ணப்படும்” என்று விளக்கியதோடு, முறைகேடு நடப்பதாகக் கூறுவதற்கு உங்களிடம் என்ன ஆதாரம் இருக்கிறது என்று நேரடியாகக் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளிக்க முடியாமல் திணறிய அதிபர் ட்ரம்போ, “நான் எதையும் தேடிப் பார்க்க வேண்டியதில்லை, சும்மா பார்த்தாலே தெரிகிறது” என்றும், “மக்கள் சொல்வதையே நான் கேட்கிறேன்” என்றும் மழுப்பலாகப் பேசினார். நெறியாளர் கிறிஸ்டன் விடாமல் தொடர்ந்து ஆதாரம் கேட்டு நெருக்குடி கொடுத்ததால் பயங்கர கோபமடைந்த ட்ரம்ப், அந்தப் பெண் நெறியாளரை நேரலையிலேயே “அயோக்கியள்” (Crooked) என்றும், “முட்டாள்” (Stupid) என்றும் கடுமையாகத் திட்டித் தீர்த்தார்.
President Trump CUTS OFF and WALKS OUT of a Kristen Welker interview
He looks her in the eyes and tells her SHE'S A LIAR, then storms off!
"The elections are like a 3rd world country. YOU'RE CROOKED…let's call it QUITS. I've HAD ENOUGH."
WELKER: Please, I traveled all the… pic.twitter.com/rpJT7MUhsB
— The World Watch ⛨ (@WorldWatchGoat) June 8, 2026
அத்துடன் நிறுத்தாமல், கடும் எரிச்சலுடன் நெறியாளரைப் பார்த்து கிண்டலாக “தேங்க்யூ டார்லிங்” (Thank you darling) என்று கூறிவிட்டு, தன்னிடம் இருந்த மைக்கைக் கழற்றித் தரையிலேயே போட்டுவிட்டு, தேசிய அளவில் நேரலையாக ஓடிக்கொண்டிருந்த அந்தப் பேட்டியைப் பாதியிலேயே முடித்துக் கொண்டு அவசர அவசரமாக வெளியேறினார். சோசியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவி வரும் இந்த அதிரடி வீடியோ, தற்சமயம் உலக நெட்டிசன்கள் மத்தியில் மிகப்பெரிய விவாதத்தையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.
