நடன கலைஞராக திரையுலகில் அறிமுகமாகி பிறகு நடிகர், டைரக்டர் என பன்முக திறமைகளை காட்டி மக்கள் மனதில் பெரிய இடத்தை பிடித்தவர்தான் பிரபுதேவா. நடனத்தை தாண்டி இவர் தற்போது அதிகம் படங்கள் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த அடிப்படையில் பிரபுதேவா வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் “பஹீரா”. சைக்கோ கொலை த்ரில்லர் படமாக உருவாகி இருக்கிறது.

நேற்று ரிலீஸ் ஆகியுள்ள இப்படத்தை அத்விக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இப்படத்தில் அமிரா தஸ்தூர், காயத்ரி சங்கர், ஜனனி ஐயர், ரம்யா நம்பீசன், சாக்ஷி அகர்வால், சஞ்சிதா செட்டி, சோனியா அகர்வால், நாசர், சாய்குமார் செட்டி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கின்றனர். படத்தில் பஹீரா என்பவர் ஆண்களை ஏமாற்றும் பெண்களை கொலை செய்யும் நபர் ஆவார்.

இவர் ஏமாற்றும் பெண்களை குறிவைத்து டெடி பொம்மைகள் வாயிலாக ஏவி கொலை செய்கிறார். இதனிடையில் பஹீரா நான்கு பெண்களை காதலித்து கல்யாணம் செய்து அவர்களையும் கொலை செய்ய திட்டமிடுகிறார். அவன் ஏன் இப்படி கொலை செய்கிறார்?, அதற்கு பின்னால் என்ன காரணம்..?, பஹீராவின் இச்செயலுக்கு பின்னணி என்ன..? என்பதே படத்தின் மீதி கதை ஆகும். இந்த திரைப்படத்தில் பஹீரா என்ற கதாபாத்திரத்தில் பிரபுதேவா நடித்திருக்கிறார்.