தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் விஜய். இவர் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்த ஜனவரி மாதம் 11-ம் தேதி வெளியான நிலையில் 300 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்திருந்தது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், யோகி பாபு போன்ற பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள்.

இந்த படம் கடந்த 22-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்நிலையில் வாரிசு படத்தில் இருந்து நீக்கப்பட்ட ஒரு காட்சியை தற்போது அமேசான் பிரைம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதாவது வில்லன் பிரகாஷ்ராஜ் அலுவலகத்திற்குள் சென்று நடிகர் விஜய் மிரட்டுவது போன்ற காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளது. மேலும் இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவின் வைரல் ஆகி வருகிறது.