LPG, வர்த்தக சிலிண்டர்களின் விலையில் உயர்வு ஏற்பட்டிருக்கிறது. கடந்த 8 மாதங்களுக்கு பிறகு மானியம் இல்லா வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து உள்ளது. முன்பாக வீட்டு உபயோக LPG சிலிண்டர் விலையானது ஜூலை-6 2022 முதல் ஒரே நிலையில் தான் இருந்திருக்கிறது.

அதே நேரம் வர்த்தக சிலிண்டர்களின் நுகர்வோர் பெரும் பின்னடைவை சந்தித்து உள்ளனர். ஏனென்றால் வர்த்தக சிலிண்டர் விலையானது ரூபாய்.350 வரை உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று மார்ச் 1ம் தேதி என்பதால் விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளது. அந்த அடிப்படையில் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் சிலிண்டர் விலையானது சென்னையில் ரூபாய்.50 அதிகரித்து 1118.50க்கு விற்பனையாகிறது.