
அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுகவினருக்கு கழகம் ஒரு குடும்பம் கிடையாது, குடும்பமே கழகம் என்ற வகையில் ஒரு கழகத்தை தன்னுடைய குடும்ப ஆதிக்கத்திலேயே கொண்டு வந்து , குடும்ப ஆட்சி தான் இன்றைக்கு தமிழ்நாட்டிலேயே நடைபெறுகின்றது.
இது திமுகவில் இருக்கிறவர்களுக்கு தெரிவதில்லை. குடும்ப பாசம் உணர்வு மிக்க இயக்கமாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உருவாக்கி, அதன் அடிப்படையிலேயே செயல்படுகின்றது. திமுகவை பொருத்தவரையில் ஒரு வாரிசு அரசியல்… ஒரு குடும்ப அரசியல்… அப்பா, புள்ள, பேரன். அப்புறம் இன்னொரு பேரன். இது கூட புல் ஸ்டாப் வச்சிருவாங்க. இனிமேல் தமிழ்நாட்டுல திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்கு வராது என தெரிவித்தார்.
காளிமுத்து அண்ணன் சொல்லுவாரு ஒன்னு… கறந்த பால் மடிப்புகாது, கருவாடு மீன் ஆகுமா ? ஆகாது. இது ரெண்டையுமே நடக்காத ஒரு சூழ்நிலையில் இனிமேல் திமுக ஆட்சி என்பது வராது. அதுதான் இன்றைக்கு தமிழ்நாட்டு மக்களுடைய ஒவ்வொரு பொதுமக்கள், தொண்டர்களுடைய உணர்வு.
கேடுகெட்ட ஜென்மம் யாருன்னா ஓபிஎஸ் தான். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை காட்டி கொடுக்கின்ற ஒரு துரோகியாக இருக்கின்ற ஓபிஎஸ் இதனை ரசிக்கிறார். ஒருத்தர் தாயை பழிக்கின்றார் என்றால் ? வெகுண்டு எழ வேண்டாமா ? வெகுண்டு எழாமல் அப்படியே ரசித்துக்கிறார். அப்படின்னா ஒவ்வொரு தொண்டனும் சரி, ஓபிஎஸ்யை மன்னிக்க மட்டன். ஓபிஎஸ் துரோகத்திற்கு நிச்சயமாக மன்னிப்பே கிடையாது என தெரிவித்தார்.