இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவராக முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் சாஹிப் அவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவராக முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் சாஹிப் அவர்கள் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் கே.எம்.காதர் மொகிதீனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். முக ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆழ்ந்த கல்விப்புலமையும், நெடிய அனுபவமும் கொண்ட அவரது அரசியல் பணி மேலும் சிறக்கவும்; வெற்றிகள் பெறவும் வாழ்த்துகிறேன்” என பதிவிட்டுள்ளார்.