ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில், ஆகஸ்ட் 20 காலை 6:40 மணியளவில், ஒரு பெண் தனது வீட்டருகே நடந்து செல்லும்போது, தெரு நாய்கள் கூட்டமாகத் தாக்கிய சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி, சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. வண்டியில் அமர்ந்திருந்த ஒரு நாய், எந்த காரணமுமின்றி ஆக்ரோஷமாக குரைக்கத் தொடங்கியது.

பிற நாய்களும் இணைந்து, பெண்ணைச் சுற்றி வளைத்து, அவரது உடைகளைப் பற்களால் இழுத்தன. இந்த சம்பவம் நகர்ப்புற விலங்கு மேலாண்மை குறித்து பெரும் விவாதத்தைத் தூண்டியுள்ளது.

அதிர்ஷ்டவசமாக, அந்தப் பெண் தப்பித்து, காயமின்றி வீட்டிற்குள் ஓடி ஒளிந்தார். நாய்கள் உடனே சிதறி ஓடின. இந்த வீடியோவைப் பார்த்தவர்கள், “தெரு நாய்களை கட்டுப்படுத்த உணர்ச்சிவசப்படாமல், முறையான கருத்தடை, தடுப்பூசி மற்றும் பாதுகாப்பு மண்டலங்கள் தேவை.

குழந்தைகள் நடமாடும் இடங்களில் இவை இருக்கக் கூடாது” என வலியுறுத்தினர். உச்சநீதிமன்றம் தெரு நாய்களை பாதுகாப்பு இல்லங்களில் வைக்க வேண்டும் எனக் கூறியது சரியானது என சிலர் கருத்து தெரிவித்தனர்.

ஆனால், “பெண் கையாலும் வார்த்தையாலும் நாயைத் தூண்டிவிட்டார்; அமைதியாக, கண் பார்வையின்றி நடந்திருந்தால் இது தவிர்க்கப்பட்டிருக்கும்” என சிலர் வேறு கோணத்தில் கருத்து கூறினர்.