உச்ச நட்சத்திரமான அஜித், வினோத் இயக்கத்தில் நடித்த துணிவு திரைப்படம் சென்ற மாதம் பதினொன்றாம் தேதி வெளியாகி பல சாதனைகளை நிகழ்த்தியது. இத்திரைப்படத்தை அஜித் தனது மனைவி மற்றும் மகளுடன் சேர்ந்து பார்த்தார். மேலும் வீடியோவும் சோசியல் மீடியாவில் வெளியானது.

இந்த நிலையில் துணிவு திரைப்படத்தை தொடர்ந்து கவின் நடிப்பில் நேற்று வெளியான டாடா திரைப்படத்தின் முதல் நாள் காட்சியை ஷாலினி மற்றும் அவரின் மகள் அனோஷ்கா உள்ளிட்டோர் பிரபல தியேட்டரில் பார்த்திருக்கின்றார்கள்.

கவின் நடிப்பில் கணேஷ் கே பாபு இயக்கத்தில் நேற்று டாடா திரைப்படம் ரிலீஸ் ஆனது. இத்திரைப்படத்தில் கவின், அபர்ணா தாஸ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் பலரும் நடித்திருக்கின்றார்கள். இந்த திரைப்படம் வெளியான ஒரே நாளில் 1 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.