தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் தற்போது மாமன்னன் திரைப்படம் உருவாகி இருக்கின்றது. இத்திரைப்படத்தை அடுத்து ஜெயம் ரவியுடன் சைரன் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். மேலும் பல திரைப்படங்களில் நடிக்க கமிட்டாகி இருக்கின்றார்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் கீர்த்தி சுரேஷ் அவ்வபோது போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றார். இந்த நிலையில் தற்போது வித்தியாசமான முறையில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை பதிவிட்டு இருக்கின்றார். இந்த வீடியோவை ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகின்றார்கள்.