பாலிவுட் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ஷாருக்கான் நடிப்பில் சென்ற சில வாரங்களுக்கு முன்பாக பதான் திரைப்படம் வெளியாகி சக்க போடு போட்டு வருகின்றது. இத்திரைப்படம் வெளியான சில நாட்களிலேயே 500 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்திருக்கின்றது. இது இத்திரைப்படத்தின் மூலம் ஷாருக்கான் கம்பேக் கொடுத்திருக்கின்றார்.

இந்த படத்தை தொடர்ந்து ஷாருக்கான் தற்போது அட்லீ இயக்கும் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா உள்ளிட்டோரும் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றார்கள். அண்மையில் ஜவான் திரைப்படத்தின் பட்ஜெட்டை தாண்டி 14 கோடிக்கு மேல் செலவை அட்லீ ஏத்தி விட்டாராம். இதனால் அட்லீ மீது ஷாருக்கான் கோபம் அடைந்திருக்கின்றார். மனக்குழப்பத்தை போக்குவதற்காக அட்லீ சென்னை வந்திருப்பதாக செய்தி வெளியாகி இருக்கின்றது.