தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் ராஷ்மிகா மந்தனா. இவர் விஜய் உடன் நடித்த வாரிசு திரைப்படம் அண்மையில் ரிலீசானது. இத்திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று ஓடிக் கொண்டிருக்கின்ற நிலையில் இந்தி திரைப்படங்களில் ராஷ்மிகா பிஸியாக நடித்து வருகின்றார். மேலும் நான்கு திரைப்படங்களில் கமிட்டாகி இருக்கின்றார். இந்த நிலையில் ராஷ்மிகா குறித்து செய்தி ஒன்று வெளியாகி இருக்கின்றது.

ராஷ்மிகா ஹைதராபாத், கோவா, மும்பை, கூர்க், பெங்களூரூ என ஐந்து மாநிலங்களில் ஐந்து சொகுசு வீடு வாங்கி இருப்பதாக செய்தி வெளியாகியிருக்கின்றது. இது பற்றி கூறிய ராஷ்மிகா அது உண்மையாக இருக்க வேண்டும் என்று தான் நானும் விரும்புகிறேன் என பதிவிட்டு இருக்கின்றார். அவரின் இந்த பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.