தமிழ் சினிமா உலகின் உச்ச நட்சத்திரமான விஜய் தற்போது வாரிசு திரைப்படத்தைத்தொடர்ந்து லியோ திரைப்படத்தில் நடிக்கின்றார். இதற்கு முன்னதாக இவர்களின் கூட்டணியில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது லியோ திரைப்படத்தின் படபிடிப்பு காஷ்மீரில் நடந்து வருகின்றது. இந்த திரைப்படத்தில் திரிஷா, கௌதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், சஞ்சய் தத், மிஸ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், சாண்டி, பிரியா ஆனந்த் என நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றார்கள்.

இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்திருக்கின்றது. அண்மையில் லியோ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட போட்டோக்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் அர்ஜூன் பலியோ திரைப்படம் குறித்து பேசி இருக்கின்றார். அவர் கூறியுள்ளதாவது, லியோ திரைப்படத்தின் கதை மீது மிகுந்த நம்பிக்கை இருக்கின்றது. இந்த படத்தில் லோகேஷ் கனகராஜ் என்னை வித்தியாசமான ஆக்சன் தோற்றத்தில் காட்ட இருக்கின்றார். விஜய் ஒரு மிகப்பெரிய நடிகர். அவருடன் சேர்ந்து நடிப்பது ஒரு புதிய அனுபவமாக உள்ளது என தெரிவித்திருக்கின்றார்.