உச்ச நட்சத்திரமான விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கின்றார். இத்திரைப்படத்தில் நடிகை திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்டோர் முதன்மை வேடத்தில் நடிக்கின்றார்கள்.

 

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக அண்மையில் பட குழு காஷ்மீருக்கு சென்றார்கள். இந்த நிலையில் பட குழுவினர் காஷ்மீரில் இருக்கும் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பதிவிட்டிருக்கின்றார். அந்த போட்டோவில் விஜய், லோகேஷ் கனகராஜ், கௌதம் வாசுதேவ் மேனன் என பலரும் இடம் பெற்றிருக்கின்றார்கள். இதனை ரசிகர்கள் தற்போது அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.