நடிகர் கமல்ஹாசனுக்குக் கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் தொடர்புடைய நடிகர் ரவிச்சந்திரனுக்குப் பாரதிய ஜனதா கட்சியில் (பா.ஜ.க.) மாநில அளவில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
விஜய் டிவியில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’, சன் டிவியில் ‘மருமகள்’ போன்ற தொடர்களில் நடித்த இவர், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக அரசியல் கருத்துகளைத் தீவிரமாகப் பேசி வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, நடிகர் கமல்ஹாசன் சனாதனம் குறித்துப் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நடிகர் ரவிச்சந்திரன் தனது யூடியூப் தளத்தில், “கமல் கழுத்தை அறுத்து விடுவேன்” என்று கொலை மிரட்டல் விடுக்கும் விதமாகப் பேசியிருந்தார்.
இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது நடிகர் ரவிச்சந்திரனுக்குப் பா.ஜ.க.வில் ‘மாநிலப் பிரச்சார அணி செயலாளர்’ பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
