அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் (ஓ.பி.எஸ்), தனது ‘அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு’ என்ற அமைப்பை தற்போது ‘அதிமுக தொண்டர்கள் உரிமைக் கழகமாக’ முறைப்படி மாற்றி அறிவித்துள்ளார்.

கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொண்டர்கள் மத்தியில் இருந்த ஆதரவு, தியாக உணர்வுடன் கூடிய செயல்பாடுகளுக்குக் கிடைத்த நன்றியின் காரணமாகவே இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஓபிஎஸ்ஸின் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது ஆதரவாளரான வைத்திலிங்கம் மேலும் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதாவது, அதிமுகவின் பிளவுபட்ட சக்திகள் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் ஒன்றிணைந்து செயல்படவில்லை என்றால், தங்கள் அமைப்பு தனிப்பெரும் கட்சியாகப் புதிய அவதாரம் எடுக்கும் என்றும் அவர் கெடு விதித்துள்ளார்.