
துக்ளக் ஆண்டு விழாவில் ஆடிட்டர் குருமூர்த்தி கேள்வி மற்றும் பதில்கள் வழங்கினார்.அதில் பேசிய அவர், ஜாதிவாரி கணக்கெடுப்பு இது கட்டுரை மட்டும் இல்லை. 1992ல் இருந்து… நாடு முழுவதும் 11 ஆண்டுகள் நான் வந்து பயணம் செய்து, எந்தெந்த இடத்தில் தொழில் முனைவோர் இருக்கிறார்கள்…. தொழில் அதுவாக வளர்ந்திருக்கிறது, அரசாங்கத்தின் உதவியில்லாத தொழில் எப்படி வளர்ந்து இருக்கிறது ? இந்த மாதிரி பல இடங்களுக்கு போய்…. தமிழ்நாட்டில் சிவகாசி அந்த மாதிரி இடங்களை பார்க்கும் பொழுது என்ன தெரிந்தது என்றால் ?
சமுதாயங்கள் மூலமாக தான் தொழில் வளர்கிறது, தொழில் முனைவோர்கள் வளருகின்றார்கள்…. ஒருதரு ஒருத்தர் ஆதரவு கொடுக்கிறார்கள்…. அவர்களுடைய சேமிப்புகளை, அவர்களுக்கு தெரிந்தவர்களுக்கு கொடுக்கிறார்கள்…. சமுதாயத்தில் ஒரு கண்ட்ரோல் இருக்கிறது…. யாரும் தவறு செய்ய முடியாது…
இதனால் ஒரு சோசியல் கேப்பிட்டல் என்று, பெரிய அளவிற்கு இதைப் பற்றி எழுது இருக்கேன்… கண்ணீர் விட்டோம், வளர்த்தும் என்பதில் பல கட்டுரை வந்திருக்கிறது. ஆனால் அரசியலில் போனால் அந்த சமுதாயத்திற்கும் கெடுதல், அரசியலுக்கும் கெடுதல். ஜாதி வாரி கணக்கெடுப்பு அப்படின்னு கூறுவதே, அரசியல் கட்சிகள் தான்… அவர்களுக்கு இந்த ஜாதியை எப்படி நம்மோடு சேர்ந்து கொள்வது….
ஏனென்றால் இன்றைக்கு இரண்டு ஜாதியை பிரிப்பது தான் அரசியலே. ஆனால் யார் வந்து வியாபாரம் பண்ணுகிறார்களோ, தொழில் பண்ணுகின்றார்களோ மற்ற ஜாதியோடு நல்ல உறவில் இருக்கனும்ம்னு நினைப்பார்கள்…. பொருளாதாரத்தில் ஜாதி எல்லோரையும் இணைக்கிறது. அரசியலில் ஜாதி எல்லோரையும் பிரிக்கிறது. அதனால் காஸ்டின் பாலிடிக்ஸ் டேஞ்சரஸ்… ஜாதி என்பதை இரண்டு விதமாக பார்க்க முடியும்… ஆக்கபூர்வமாக பார்க்க முடியும்… ஒரு பண்பு, கலாச்சாரம், நாகரிகம் உள்ள… அதாவது பழக்கவழக்கமுள்ள ஒருவர் புரிந்துகொண்டு வேலை செய்யக்கூடிய அளவிற்கு அணி இன் கார்ப்பரேட் கம்பெனி போல… ஆனால் அதை அரசியலில் கொண்டு வரும் பொழுது ஜாதியும் பிரிக்கின்றது, அரசியலும் பிரிக்கிறது. அதனால் அரசியல் நோக்கத்தோடு , இந்த ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கேட்பது தவறு என்று தோன்றுகின்றது என பேசினார்.