தமிழ் சினிமாவில் 3 என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இந்த படத்திற்கு பிறகு வை ராஜா வை என்ற படத்தை இயக்கினார். அதன் பிறகு தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். அதன் பிறகு நடிகர் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் லால் சலாம் படத்தில் நடிகர் செந்தில் இணைந்துள்ளதாக தற்போது புது தகவல் வெளிவந்துள்ளது. படையப்பா திரைப்படத்தில் ரஜினி மற்றும் செந்திலின் காமெடி காட்சிகள் இன்று வரை ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது. இந்நிலையில் மீண்டும் ரஜினி மற்றும் செந்தில் இணைந்து லால்சலாம் படத்தில் நடிக்க இருப்பதாக வெளிவந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த படத்தின் சூட்டிங் ஹோலி பண்டிகையை முன்னிட்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.