பஞ்சாப் திரை உலகில் பிரபலமான நடிகராக இருப்பவர் அமன் தாலிவால். இவர் அமெரிக்காவுக்கு சென்றிருந்த நிலையில் அங்கு ஜிம்மில் உடற்பயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு மர்ம நபர் கத்தியை எடுத்து ஜிம்மில் இருந்தவர்களை மிரட்டியுள்ளான்.

அதன் பிறகு நடிகர் அமன் தாலிவாலை அந்த மர்ம மனிதர் கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தற்போது அமன் மாலிவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நடிகர் அமன் தாக்கப்பட்ட வீடியோ காட்சிகள் சோசியல் மீடியாவில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.