ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கார் பகுதியை சேர்ந்த கயாலி சஹாரன், தொலைக்காட்சி தொடரில் நடித்து வரும் பிரபல காமெடி நடிகராகவும், இயக்குனராகவும் பணிபுரிந்துள்ளார். இந்நிலையில் இவர் மீது ஹனுமன்கார் பகுதியில் வசித்து வரும் ஒரு பெண் போலீஸ் நிலையத்தில் பாலியல் வன் கொடுமை புகாரளித்துள்ளார்.

அப்புகாரில், கயாலி சஹாரன் ஓட்டல் ஒன்றுக்கு வருமாறும், திரைத்துறையில் வேலை வாங்கி தருவது தொடர்பாக பேசவேண்டும் எனவும் என்னிடம் கேட்டு கொண்டார். இதை உண்மையென நம்பி ஓட்டல் அறைக்கு சென்றபோது அவர் தன்னை பாலியல் வன் கொடுமை செய்துவிட்டார் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.