செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, மணிப்பூர் கலவரத்தில் சீனா ஊடுருவல் மியான்மர் வழியாக நடந்துள்ளது என பேசிய அவர், மணிப்பூரில் ஊடுருவல் நடந்திருக்கு என்று சொல்லவில்லை. இங்கே வருகின்றவன் அடிக்கடி அங்க குதிக்கிறான்.எல்லை பகுதியின் எல்லா இடத்துலயும் லைனா ஆளு இருந்தாலும், சில சமயத்துல ஊடுருவல் நடக்கும். நடந்தவுடனே, அதுக்கு பிறகு நடவடிக்கை எடுப்பாங்க என தெரிவித்தார்.

உடனே செய்தியாளர்கள் ஊடுருவல் போன்ற விஷயங்கள் என்றால் மத்திய அரசு தானே நடவடிக்கை எடுக்கணும் என்று கேள்வி எழுப்பிய போது,

இத பாருங்க நீங்க அறிவாலய நண்பர்களாக  இருக்கலாம், இல்ல அறிவாலய ஏஜெண்டாக இருக்கலாம். அதற்காக நான்.. வேங்கை வயலுக்கு போக மாட்டேன், நான் வந்து IT  அதிகாரிகள் கையை உடைச்ச  என்னோட கட்சி குண்டர்களை கண்டிக்க மாட்டேன். ஆனால் மணிப்பூருக்கு பேசுவேன் என்று பேசாதீங்க, நான் சொல்லிட்டேன் என்னோட கருத்து முடிஞ்சது.

என் வீட்டுக்கு அமலாக்கத்துறை வந்தால் தயாராக இருக்கின்றேன் என உதயநிதி ஸ்டாலின் சொன்னது குறித்த கேள்விக்கு பதிலளித்த எச்.ராஜா, யாரு தப்பு பண்ணினாலும் அமலாக்கத்துறை வரும். உங்க தாத்தாவையே பார்த்தவங்க நாங்க. ஏன் என்று சொன்னால்..?  உங்கள் தாத்தா என்னவெல்லாம் பேசுனாரு தெரியுமா ? முன்னாள் பிரதம மந்திரி இந்திரா காந்தி அவர்களை….  இந்திரா காந்தி யார் ? காஷ்மீர் பாப்பாத்தி,  கிராப்பு வெட்டிய பாப்பாத்தி என்று…

ஆனால் சர்க்காரியா கமிஷன் ரிப்போர்ட் வந்த உடனே,  என்ன சொல்ல வேண்டியதது…  கதவை பூட்டிட்டு, கால்ல விழுந்துட்டு…  நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக என்று சொன்னார். அதனால்  உங்கள் டி.என்.ஏ என்ன என்று எங்களுக்கு தெரியும். எங்களிடம் “ங்கொப்பன் மவனே… சிங்கம் டா…” என பேச வேண்டாம் என தெரிவித்தார்.