மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  நினைவு பரிசு என்று ஓன்று கொடுத்திருக்கிறார்கள்…  அதுவே ஒரு தனி நிகழ்ச்சி மாதிரி நடத்தலாம் போல இருக்குது. இதைகொடுக்கும் போது  சொன்னேன்… இதை எப்படி நான் வீட்டுக்கு எடுத்துட்டுபோவேன் என்று சொன்னேன். நாளைக்கு தனியா கார் வச்சு அனுப்பிச்சிடுவேன் அப்படின்னு சொல்லி இருக்காரு.

அது மாதிரி நம்முடைய சட்டமன்ற உறுப்பினர்கள் இளைஞரணி வளர்ச்சிக்காக நிதி கொடுத்திருக்கிறார் அவருக்கும் இந்த நேரத்தில் இளைஞர் அணி சார்பாக என்னுடைய வாழ்த்துக்களையும் – நன்றியையும் நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

சென்னை வடக்கு மாவட்ட கழகத்தின் சார்பாக கழகத்தினுடைய 500 மூத்த முன்னோடிகளுக்கு  பொர்க்கை வழங்குகின்ற ஒரு சிறப்பான நிகழ்ச்சி. அதுமட்டுமல்ல 500 கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை,  50 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நிதி உதவி. 250 தூய்மை பணியாளர்களுக்கு உதவிகள், 250 விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள் வழங்குகின்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்.

இங்கே நம்முடைய அமைச்சர் திரு.அன்பின் மகேஷ் பொய்யா மொழி அவர்கள் சொன்னது போல… இந்த சென்னை வடக்கு மாவட்டத்திற்கு மிகப்பெரிய ஒரு பெருமை இருக்கு. ஒன்னு திமுகவின் தாய் வீடு என்றால் ? அது இந்த சென்னை வடக்கு மாவட்டம் தான். நம்முடைய பேரறிஞர் அண்ணா அவர்கள் இதே ராயபுரத்தில் உள்ள ராபின்சன்  பூங்காவில் தான்  திராவிட முன்னேற்ற கழகத்தை 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி துவங்கினார்.

இன்றைக்கு அதே வடக்கு மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டை உங்களுடன் சேர்ந்து நானும் இங்கே கலந்து கொள்வது இந்த பகுதிக்கு பெருமையோ இல்லையோ…  இந்த மாவட்டத்துக்கு பெருமையோ இல்லையோ…  உதயநிதி ஸ்டாலினான எனக்கு மிகப்பெரிய பெருமையை தேடித் தந்திருக்கிறீர்கள்.  அதற்கு மீண்டும் நம்முடைய மாவட்ட கழக செயலாளர், அண்ணன் சேகர்பாபு அவர்களுக்கும்…  இந்த பகுதியைச் சேர்ந்த அத்தனை சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் –  நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் – கழகத்தினுடைய மூத்த முன்னோடிகள் அத்தனை பேருக்கும் என்னுடைய வணக்கத்தையும்,  நன்றியையும் நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இங்கே குறிப்பிட்டு பேசினார்கள் அண்ணன் சேகர்பாபு அண்ணன் அவர்கள்…  எத்தனையோ நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும்,  கடந்த ஒன்றை வருடமாக எந்த மாவட்ட கழகச் செயலாளர், எந்த மாவட்ட அமைச்சர்,  அவர்களுடைய மாவட்டத்திற்கோ, அவர்கள் இருக்கக்கூடிய தொகுதிக்கோ…  நிகழ்ச்சி நடத்தணும்,  நீங்க வந்து நடத்தி கொடுங்கன்னு சொல்லும்போது…  நான் அவங்க கிட்ட சொல்ற ஒரே அன்பு வேண்டுதல் –  கட்டளை என்று சொல்ல மாட்டேன்.

அன்பு வேண்டுதல் என்னன்னா…  நான் கண்டிப்பா உங்க மாவட்டத்துக்கு வாரேன். எத்தனை நிகழ்ச்சினாலும்  நடத்தலாம்… காலையிலிருந்து இரவு வரைக்கும் எந்த நிகழ்ச்சி – அரசு நிகழ்ச்சி – கட்சி நிகழ்ச்சி- எல்லா நிகழ்ச்சினாலும் நடத்துங்க. ஆனால் எனக்காக…  என்னுடைய திருப்திக்காக ஒரே ஒரு நிகழ்ச்சியை நீங்கள் நடத்த வேண்டும். அதற்கு நீங்கள் உத்தரவாதம் கொடுத்தீங்கன்னா…

நான் கண்டிப்பா உங்க மாவட்டத்திற்கு வருவேன்னு சொல்லுவேன். அந்த ஒரு நிகழ்ச்சி தான்,   கழகத்திற்காக உழைத்த….. இரத்தம் சிந்திய…  கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கை வழங்குகின்ற…. அவர்களை கௌரப்படுத்துகின்ற ஒரு நிகழ்ச்சி. அப்படித்தான் இந்த நிகழ்ச்சியும், இந்த தேதியும் என்னிடத்தில் கேட்டு வாங்க பெற்றது என தெரிவித்தார்.