தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு வருகின்ற ஞாயிற்றுக்கிழமை விடுமுறை கிடையாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. வருகின்ற ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல ரேஷன் கடைகள் அனைத்தும் செயல்படும் என தமிழக அரசு சற்று முன் அறிவித்துள்ளது. மகளிர் உதவி தொகை உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தி வரும் நிலையில் நிர்வாக காரணங்களுக்காக வருகின்ற ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் செயல்படும். இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் அடுத்த மாதம் 26 ஆம் தேதி விடுமுறை நாளாக இருக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.