சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பொது நல அமைப்பு உலக பொருளாதார மன்றம் ஆகும். உலக பொருளாதார மன்றத்தின் ஆண்டு கூட்டம் சுவிட்சர்லாந்து நகரின் தாவோஸ் நகரில் நடந்து வருகிறது. உலகின் முக்கிய அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

சர்வதேச அரசியல், கொரோனாவால் சரிந்த உலகப் பொருளாதாரம், மக்கள் சுகாதாரம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் பற்றி கூட்டத்தில் பங்கேற்க ஆலோசிக்கப்படவுள்ளது. வருடந்தோறும் உலக பொருளாதார மன்றத்தின் முதல் 30 செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியல் வெளியிடப்படும். அதன்படி நடப்பு ஆண்டுக்கான அதிக செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.

அதில் 2 இந்திய அரசியல்வாதிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அதாவது, தெலங்கானா மாநிலத்தின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் துறை அமைச்சரும், தெலங்கானா முதலமைச்சரின் மகனுமான கே.டி.ராமா ராவ் 13வது இடம்பிடித்துள்ளார். அதே உலக பொருளாதார மன்றத்தின் டாப் 30 பட்டியலில் தெலங்கானா தகவல் தொழில்நுட்பத் துறை 22-வது இடம் பிடித்து சாதனைப் படைத்து உள்ளது.

அதேபோல் பட்டியலிலுள்ள மற்றொரு இந்தியர், நாடாளுமன்ற உறுப்பினரான ராகவ் சாதா. டெல்லியை சேர்ந்த 34 வயதான ராகவ் சாதா, ஆம் ஆத்மி கட்சியின் எம்பி ஆவார். பஞ்சாப் தொகுதியில் வெற்றிபெற்று நாடாளுமன்றத்துக்கு தேர்வான ராகவ் சாதா, குறைந்த வயதில் நாடாளுமன்றத்துக்கு தேர்வானவர் என்ற சாதனையை படைத்து உள்ளார்.