கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு நாளை(வியாழக்கிழமை) இந்திய பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதில் கர்நாடகாவில் ரூபாய்.10,800 கோடி மதிப்பிலான திட்டங்கள் மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் ரூபாய்.38,800 கோடி மதிப்பில் ஆன திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்ற திட்டங்களை பிரதமர் துவங்கிவைக்க இருக்கிறார்.

அதன்படி, கர்நாடகாவின் யாத்கிரி மாவட்டத்துக்கு நண்பகல் 12 மணிக்கு போகும் பிரதமர் மோடி, தரமான குடிநீரை அனைத்து வீடுகளுக்கும் குழாய் வாயிலாக வழங்க வேண்டும் என்ற பிரதமரின் தொலை நோக்கு திட்டத்தை அடிப்படையாக கொண்டு ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் பல கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். இத்திட்டத்தின் கீழ் 117 எம்எல்டி திறனுடைய நீர் சுத்திகரிப்பு நிலையம் 2,050 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 2.3 லட்சம் வீடுகள் குழாய் வாயிலாக குடிநீர்வசதி பெறும்.