ராஜஸ்தான் மாநிலம் உயர்நீதிமன்றத்தில் காலியாகவுள்ள நீதிபதிகள் பதவிக்கு 9 நபர்கள் அறிவிக்கப்பட்டனர். இந்த நிலையில் தலைமை நீதிபதி பங்கஜ் மிட்டல் தலைமையில் தம்பதி நீதிபதி உட்பட புதியதாக 9 நீதிபதிகள் பதவியேற்றுக் கொண்டனர். அவ்வாறு புதியதாக பதவியேற்று கொண்ட நீதிபதிகளில் நுபுர் பாட்டி, புஸ்பேந்திர சிங் பாட்டி ஆகியோர் தம்பதியினர் ஆவர். முன்பே ராஜஸ்தான் நீதிமன்றத்தில் மகேந்திர கோயல் மற்றும் சுபா மேத்தா என்ற தம்பதி நீதிபதிகளாக இருக்கின்றனர்.

இப்போது மேலும் ஒரு தம்பதியினர் நீதிபதிகளாக பதவி உயர்வு பெற்று உள்ளனர். இதன் வாயிலாக நாட்டிலேயே 2 தம்பதி நீதிபதிகள் கொண்ட உயர்நீதிமன்றம் எனும் தனிச் சிறப்பை அம்மாநிலம் பெற்றது. பதவியேற்றுக்கொண்ட 9 நீதிபதிகளில் 3 பேர் வழக்கறிஞர்களாக இருந்து, நீதிபதிகளாகப் பதவி உயர்வு பெற்றவர்கள் ஆவர். சென்ற திங்கட்கிழமை (ஜன.16) பதவியேற்றுக் கொண்ட நீதிபதிகளில் புஸ்பேந்திர சிங் பாட்டி ஒருவர் மட்டுமே பெண் ஆவார். இதன் வாயிலாக ராஜஸ்தான் நீதிமன்றத்திலுள்ள பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 3ஆக அதிகரித்தது.