கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராஜ வீதியில் துணி வணிகர் சங்க அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 1800-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கழிவறையை குறையாக பராமரிக்கவில்லை என கூறி மாணவிகள் பெற்றோருடன் ராஜ வீதியில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அறிந்த போலீசாரும், மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு சென்று மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி கழிவறைகளை முறையாக சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளனர். அதன் பிறகு மாணவிகள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.