கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வண்டிக்காரனூர் கிராமத்தில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் கிரிஜா தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று கிரிஜா தனது வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு வந்த பெற்றோர் கிரிஜா தற்கொலை செய்து கொண்டதை கண்டு கதறி அழுதனர்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிரிஜாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கிரிஜா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.