புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கட்ராம்பட்டியில் ஆட்டோ டிரைவரான செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவரின் மகன் விஷ்ணு அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறான். ஆயுத பூஜையை முன்னிட்டு ஆட்டோ ஸ்டாண்டில் பந்தல் அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது மின்மாற்றி அருகில் நின்று கொண்டிருந்த விஷ்ணு மீது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்தது.

இதனால் தூக்கி வீசப்பட்டு கடுகாயமடைந்த விஷ்ணுவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.