நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசனகுடி லட்சுமி நகரில் இருக்கும் வீட்டிற்குள் நாகப்பாம்பு நுழைந்தது. இதனை பார்த்ததும் வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதுகுறித்து வீட்டு உரிமையாளர் சிங்கரா வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற சிங்கரா வனத்துறையினர் முரளி என்பவரது உதவியுடன் சுமார் 6 அடி நீளம் உள்ள நாகப்பாம்பை பிடித்தனர். இதனையடுத்து அந்த பாம்பு அடர்ந்து வனப்பகுதியில் விடப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.