SBI மூத்தக்குடிமக்களுக்குரிய சிறப்பு நிரந்தர வைப்பு திட்டம் பல வழங்கி வருகிறது. இத்திட்டத்தில் ஏகப்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்கும் நிலையில், வட்டி விகிதத்தை மீண்டும் உயர்த்தி உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த வகையில் மூத்தக்குடிமக்கள் சிறப்பு FD திட்டம் செப்டம்பர் 2020 முதல் முதலீட்டு தேதியுடன் 20 மே 2020 அன்று துவங்கப்பட்டது.

அதோடு முதலீட்டின் கடைசி தேதி மார்ச் 31 2023 என தெரிவிக்கப்பட்டது. தற்போது அதை ஜூன்-30 2023 வரை நீடித்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மூத்தக்குடிமக்களுக்காக வங்கி இந்த சிறப்பு FD திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கும் நிலையில், அவர்கள் இத்திட்டம் வாயிலாக தங்களது வருமானத்துடன் பாதுகாப்பாகவும் அதிக வட்டியும் பெறலாம். அதுமட்டுமின்றி வாடிக்கையாளர்கள் இத்திட்டத்தில் வங்கி கிளைகள், இணைய வங்கி (அ) Yono வாயிலாக பதிவுசெய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.