நம் நாட்டின் வலுவான பொருளாதார நடவடிக்கைகள் காரணமாக இந்த ஆண்டின் துவக்கத்தில் சில்லறை பணவீக்கமானது 6.52 சதவீதமாக இருந்தது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வே சில்லறை பணவீக்கம் உயர்வுக்கான காரணம் என சொல்லப்படுகிறது. சென்ற ஜனவரி மாதம் நாடாளுமன்றத்தில் 2023-ம் வருடத்துக்கான பொருளாதார ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

அந்த அறிக்கையில் 2023-2024 ஆம் வருடத்தில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6-6.8 சதவீதம் ஆக இருக்கும் என கணிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 2023-24 ஆம் நிதி ஆண்டில் நாட்டின் சில்லறை பணவீக்கம் 5.2 சதவீதமாக குறையும் என உலக வங்கியானது தகவல் தெரிவித்துள்ளது. இப்போது இந்தியாவில் நிலவும் மந்தமான நுகர்வு நிலை காரணமாக பொருளாதார வளர்ச்சி தடைபடும் எனவும் தெரிவித்துள்ளது.