நம் நாட்டில் டிஜிட்டல் பணபரிமாற்ற செயலியான போன்பே அதிகமான பயனாளர்களை கொண்டு சிறப்பாக இயங்கி வருகிறது. இப்போது போன்பே தன் பயனாளர்களுக்கு உதவும் விதமாகவும் தனது வணிகத்தை விரிவுபடுத்தும் நோக்கிலும் பின்கோடு எனும் ஷாப்பிங் செயலியை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் பயனாளர்கள் உணவு, மளிகை உள்ளிட்ட பொருட்களை பெறலாம். இச்செயலி ONDCன் ஒரு பகுதியாக செயல்பட்டு வருகிறது.

இந்த செயலி முதற்கட்டமாக பெங்களூர் நகரத்தில் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. இதில் நாள் ஒன்றுக்கு 10,000 பரிவர்த்தனைகள் நடைபெறும் நிலையில், பின்கோடு செயலி மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இச்செயலி உள்ளூர் சில்லறை விற்பனையாளர்களை ஆதரித்து அவர்களின் வணிகத்தை ஊக்குவிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயலி வாயிலாக நடப்பு ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் நாள் ஒன்றுக்கு 1 லட்சம் ஆர்டர்களை பெறுவதை இலக்காக கொண்டு செயல்படுவதாக போன்பே நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.