எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் தங்கள் நீண்டகால கோரிக்கையான பணியாளர் பற்றாக்குறையைப் போக்க வலியுறுத்தி, நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இந்த திடீர் போராட்ட அறிவிப்பால், வரும் மே 24 ஞாயிற்றுக்கிழமை மற்றும் மே 27 பக்ரீத் பண்டிகை விடுமுறை நாட்களை உள்ளடக்கி, தொடர்ந்து நான்கு நாட்கள் எஸ்பிஐ வங்கிச் சேவைகள் முடக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் தொடர்ச்சியாக நான்கு நாட்கள் வங்கி விடுமுறை வருவதால், வாடிக்கையாளர்களின் பணப் பரிவர்த்தனைகள் மற்றும் வங்கி சார்ந்த பணிகள் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது. இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், முக்கியமான வங்கிப் பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு முடித்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
