“டெர்மினேட்டர்” திரைப்படம் வாயிலாக பிரபலமான அர்னால்ட் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் ஆளுநராகவும் இருந்து உள்ளார். இவர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள முக்கிய சாலையில் மிகப்பெரிய குழி ஏற்பட்டிருந்தை சீர்செய்ய உரிய அலுவலர்களை தொடர்புகொண்டு தகவல் அளித்துள்ளார். எனினும் நகரின் நிர்வாகம் சார்பாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், தானே நேரடியாக களமிறங்கி சாலையிலிருந்த பள்ளத்தை சீர் செய்து உள்ளார் அர்னால்ட்.

இந்த சீரமைப்பு பணிகள் குறித்த விடியோவை தன் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள அர்னால்ட், “பல வாரங்களாக கார்கள், சைக்கிள்களை சிதைத்து கொண்டிருக்கும் இப்பள்ளத்தால் மக்கள் பெரும் கவலையில் ஆழ்ந்து உள்ளனர். நான் என் குழுவினருடன் சென்று இந்த பள்ளத்தை சீர் செய்திருக்கிறேன். எப்போதும் புகார் கூறி கொண்டு இருக்கவேண்டாம்.

அதற்கு பதில் நீங்களே ஏதாவது செய்துவிடுங்கள்” என குறிப்பிட்டு உள்ளார். இந்த வீடியோவை தன் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் “இரத்த அழுத்தத்தை சரிசெய்ய இது சிறந்த சிகிச்சை” என பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோவானது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.