கடந்த 1990ம் வருடம் வெளியான என் காதல் கண்மணி திரைப்படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் விக்ரம். இதையடுத்து தமிழ், தெலுங்கு உட்பட பிற மொழி திரைப்படங்களில் கவனம் செலுத்திய விக்ரம், இரட்டை இயக்குனர்களான ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் வெளியான உல்லாசம் படத்தின் வாயிலாக மீண்டும் தமிழில் தடம் பதித்தார். அதன்பின் வித்தியாசமான கதைக்களத்தில் நடித்து வரக்கூடிய விக்ரம், நடிகர், டப்பிங் ஆர்டிஸ்ட், பாடகர் என பண்முகத் தன்மை கொண்டவர் ஆவார்.

இவர் இப்போது வரும் 28ம் தேதி வெளியாக இருக்கும் “பொன்னியின் செல்வன் -2” படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இந்த நிலையில் விக்ரம் இந்திய கிரிக்கெட் வீரரான தோனியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தன் சமூகவலைதளபக்கத்தில் பகிர்ந்து, “நீங்கள் எப்போதும் எங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்த தவறியதில்லை மகி” என பதிவிட்டுள்ளார். இப்பதிவு தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.