உலகின் செல்வாக்கு மிக்க 100 நபர்களின் பட்டியலை வருடம் தோறும் அமெரிக்காவின் டைம்ஸ் இதழ் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டிலும் உலகின் செல்வாக்கு மிக்க 100 நபர்களின் பட்டியலை டைம்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலின்படி உலகின் செல்வாக்கு மிக்க நபர்களில் நடிகர் ஷாருக்கான் முதல் நபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக பதிவான 12 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளில் நடிகர் ஷாருக்கான் 4 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார். மேலும் இந்த பட்டியலில் இயக்குனர் ராஜமௌலி, எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, சமையல் கலை நிபுணரும் இந்திய வம்சாவளியுமான பத்மலட்சுமி ஆகியோரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளது.